Best Handmade Soap Doodle Information Portal

What is a Good Soap; எது நல்ல சோப்பு?

what is a good soap(image courtesy: flickr)
Author: Balaji Shankar, Jun 5, 2024

Informational article on "What is a good soap?" in Tamil

எது நல்ல சோப்பு?

இந்தக் கட்டுரையில் சோப்பு என்பது என்னவென்றும், அது நமக்குத் தேவையா என்றும் , குளியலுக்கு எப்படிச் சோப்பைத் தேர்ந்தெடுப்பது என்றும் பார்க்கலாம்.

சோப்பு என்பது என்ன?

சோப்பு என்பது அதிக காரத்தன்மை (alkaline) கொண்ட கரைசலில், அமில‌த் தன்மை (acid) கொண்ட கொழுப்புக்களைக் (திரவங்களைக்) கலந்து, விடாமல் வெகுநேரம் இளக்கினால் உருவாகும் ஒரு கட்டி. பெரும்பாலும் லை (lye) என்று அழைக்கப்படும் காஸ்டிக் சோடாவே திடமான சோப்புக்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தக் காஸ்டிக் சோடாக் கற்களை (கல் உப்பு போன்று வடிவம் கொண்டிருக்கும்), சுத்தமான நீரில் கலந்து, அதன் சூடு ஆறிய பின் அதில் நம் விருப்பத்திற்கு ஏற்ற கொழுப்பைக் கரைத்து சோப்பு தயாரிக்கப் படுகிறது. கொழுப்பு என்பது அமிலத் தன்மை கொண்டது.கொழுப்பின் தன்மையும், அளவும்தான் சோப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

இயற்கைக் குளியல் சோப்

இயற்கைக் குளியல் சோப் என்றால் காஸ்டிக் சோடாவைத் தவிர மற்ற இடுபொருட்கள் யாவும் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டால், அச்சோப்பு இயற்கைக் குளியல் சோப் என்று கருதப்படுகிறது. உதாரணமாக, தேங்காய் எண்ணை, வேப்ப எண்ணை போன்ற எண்ணைகளுடன், காஸ்டிக் சோடாவைக் கலந்து சோப்பு கையால் தயாரித்தால் அதை இயற்கை குளியல் சோப்பு என்று அழைக்கலாம்.

ஆர்கானிக் சோப்பு

அதற்கு ஒரு படி மேலே போய், அதில் பயன்படுத்தப்படும் எண்ணைகள் எல்லாம் மென்செக்குகளில் நுண்ணூட்டம் குறையாமல் ஆட்டப்பட்டும் (cold pressed)) கொப்பரை போன்ற மூலப் பொருட்கள் இயற்கை வேளாண்மையில் சாகுபடி பண்ணப் பட்டும் (organic)) இருந்தால் அதை ஆர்கானிக் சோப்பு என்று அழைக்கலாம். எங்கள் தயாரிப்பான டூடில் சோப் (Doodle Soap) ஒரு ஆர்கானிக் சோப்பு ஆகும்.

நாம் குளிப்பதற்கு சோப்பு தேவையா?

நம் தோலில் சீபம் (sebum) எனப்படும் ஒரு அமிலத்தன்மை கொண்ட எண்ணெய் இயல்பாகவே சுரக்கிறது. இது நம் தோலைப் பாதுகாக்க இயற்கையாய் உள்ள ஒரு விஷயம். அழுக்கும், தூசியும், பாக்டீரியாக்களும் இந்த சீபம் என்னும் அமிலத்தில் ஒட்டிக்கொண்டு, வியர்வையோடு ஒரு பிசுபிசுப்பை ஏற்படுத்தி விடுவதால் நாம் குளிக்கும் போது சோப்பு தேவையாகிறது.

காரத்தன்மை கொண்ட சோப்பு, நம் தோலின் மேலுள்ள சீபம் உடன் கலந்து நீரில் கரையக் கூடிய ஒரு உப்புப்போன்ற கலவையாய் மாற்றம் அடைகிறது. இதனால் சீபத்துடன், நம் சருமத்தில் உள்ள அழுக்குக்களும் எளிதாக அகன்று விடுகின்றன.

இயற்கை உணவை உண்டு, சூழல் மாசில்லாத இடங்களில் வாழ்பவர்களுக்கு சோப்பு என்பது தேவையே இல்லை. பெரும்பாலான மானுடம் இயற்கையில் இருந்து விலகி வாழ்வதால் சோப்பு என்பது ஒரு அத்தியாவசியப் பொருள் ஆகி விட்டது!

ந‌ம் சோப்பை எப்படித் தேர்ந்தெடுப்பது?

சில அளவுகளைத் துல்லியமாக ஆராய்வதன் மூலமும், சில அறிவார்ந்த கேள்விகள் கேட்பதின் மூலமும் நாம் சிறந்த சோப்பைத் தேர்ந்தெடுக்க இயலும். இதற்கு நாம் முதலில் சில அறிவியல் தரவுகளைப் பார்ப்போம்

1. காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH)

காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) என்பது ஒரு கரைசலின் தன்மையை அமிலமா  அல்லது காரமா என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள ஹைட்ரஜன் வாயுவின் (நீர்வளி) அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.

காரகாடித்தன்மைச் சுட்டெண் 0 ல் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 °Cல் 7.0 ஆகும், இதை நடுநிலை என்று அழைக்கப்படுகிறது. ஏதேனும் கரைசலில் 7.0 க்கும் கீழ் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் அமிலமாகவும், அல்லது கரைசலில் 7.0 க்கும் மேல் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது.

சோப்புக் கட்டியானது ஓரளவாவது காரத்தன்மையுடன் இருந்தால்தான் சுத்தம் செய்யும். ஒரு நல்ல சோப்பின் pH சுட்டெண் 8.0 லிருந்து 9.5 க்குள் இருத்தல் வேண்டும். நாம் வாங்கும் சோப்பின் சுட்டெண் இவ்வாறு இருப்பின் அது நம் சருமத்திற்குக் கெடுதல் செய்யாமல் மென்மையாக சுத்தம் செய்யும் என்று கொள்ளலாம்.

2. மொத்தக் கொழுப்புப் பொருட்கள் (Total Fatty Matter or TFM)

TFM என்பது சோப்பு தயாரித்து, அது முற்றிலுமாக தயாரன பின், அக்கட்டியில் உள்ள மொத்தக் கொழுப்பின் விழுக்காடு ஆகும். சோப்பு, TFMஇன் அடிப்படையில் மூன்று தரமாகப் பிரிக்கப் படுகிறது.

  • தரம் 1: 76% அல்லது அதற்கு மேல் (Grade 1)
  • தரம் 2: 70% அல்லது அதற்கு மேல் (Grade 2)
  • தரம் 3: 60% அல்லது அதற்கு மேல் (Grade 3)

3. கொழுப்பின் தன்மை

மூன்றாவதாக நாம் பார்க்க வேண்டியது சோப்பில் இடப்பட்ட‌ கொழுப்பின் தன்மை. சோப்பில் காஸ்டிக் சோடாவுடன் சேர்க்கப்படும் கொழுப்புக்களின் தன்மை சோப்பின் தரத்தை நேரடியாக பாதிக்கும். உதாரணத்திற்கு, மூன்று விதமான கொழுப்புக்களைப் பார்ப்போம்

  • அ. tallow எனப்படும் மாட்டுக் கொழுப்பு அல்லது பன்றிக் கொழுப்பு
  • ஆ. ஸ்டீரிக் அமிலம் (stearic acid)
  • இ. தேங்காய் எண்ணை
  • ஈ. இயற்கை முறையில் விளைக்கப்பட்ட கொப்பரையில் இருந்து மென்செக்குகளால் பிழியப் படும் தேங்காய் எண்ணை (cold pressed organic coconut oil)

இதில் எது நல்லது என்று நமக்கே தெரிகிறது! அதிகம் விளக்க வேண்டியதில்லை!

4. ரசாயன இடுபொருட்கள் (chemical ingredients)

இவை தவிர, சோப்பில் வேறு ஏதேனும் இடுபொருட்கள், குறிப்பாக கெமிக்கல்கள் சேர்க்கப் படுகின்றனவா என்றும் நாம் கேட்க வேண்டும். பெரும்பாலான சோப்புக்களில் நுரைப்பதற்காக SLS / SLES எனப்படும் சல்ஃபைட், சோப்பு கெடாமலிருக்க பாரபென் (Paraben) போன்ற ரசாயனங்கள் சேர்க்கப் படுகின்றன.

5. வாசனைக்காகச் சேர்க்கப்படும் ரசாயன எண்ணைகள்

இவை தவிர, மணம் ஊட்டுவதற்காக, fragrance oils போன்ற பலவித ரசாயனங்களும் சேர்க்கப் படலாம். Essential oils என்று சொல்லப்படும் தாவர வாசனை எண்ணைகள் நன்மை பயப்பனவே. எனவே வாசனைக்கோ , வண்ணத்திற்கோ வேறு ஏதேனும் வேதிப் பொருட்கள் சேர்க்கப் பட்டு உள்ளனவா என்றும் ஆராய வேண்டும்.

6. நுரைக்கும் தன்மை

வாசனையும் நுரைக்கும் தன்மையுமே ப‌யன்படுத்துவோரின் அனுபவத்தை முக்கியமாக‌ மேம்படுத்துகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே ஒரு சோப்பை வாங்கும் முன் அதற்கு ஒரு சிறிதளவான சாம்பிள் வாங்கி நாம் பயன்படுத்திய பின்னர் வாங்குவது சாலச் சிறந்தது.

7. ஈரப் பசை

பெருமளவு சோப்புக்கள் பயன்படுத்திய பின் சருமத்தில் ஒரு வற‌ண்ட உணர்வை ஏற்படுத்தும் (dry skin ). இதன் காரணம், சோப்பு தயாரிக்கும் போது அவ்வேதிக் கலவையில் கிளிசரின், சோப்பு இரண்டுமே உற்பத்தி ஆகும். பெரும்பாலான சோப்புக்கள் கிளிசரினைப் பிரித்து எடுத்து விட்டு, சோப்பை மட்டுமே விற்கின்றன. சோப்பு என்பது, சுத்தம் செய்தாலும் தோலை வறட்சி அடைய வைக்கக் கூடும். கிளிசரினோ நல்ல ஈரப்பசை கூட்டக் கூடியது, சோப்புடன் இருக்க வேண்டிய ஒன்று.

கையால், தாவர எண்ணை கொண்டு செய்யும் சோப்புக்களில் கிளிசரினைப் பிரிப்பது இல்லை. எனவே நல்ல எண்ணை விகிதாச்சாரத்தில் செய்த கைவினைச் சோப்புக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

நிறைவாக (takeaways)

இவை அனைத்தையும் கருத்தில் கோண்டு கீழுள்ள 7 கேள்விகளுக்கு திருப்தியான விடை தருகிற சோப்பை வாங்குவது நலம் தரும்!

  • 1. சோப்பின் TFM எவ்வளவு விழுக்காடு?
  • 2. சோப்பின் pH சுட்டெண் என்ன?
  • 3. என்ன கொழுப்புக்களால் செய்யப் படுகிறது? (fatty acids)
  • 4. என்னென்ன இடுபொருட்கள் உள்ளன? (ingredients)
  • 5. வாசனை எண்ணை வேதிப் பொருளா, தாவர எண்ணையா? (fragrance oil or essential oil)
  • 6. கைவினைச் சோப்பா, இயந்திரத்தால் செய்த சோப்பா? (handmade or machine made)
  • 7. மாதிரி கிடைக்குமா? என்ன விலை? (is there an affordable sample available?)

சோப்பு வாங்கும் முன் நாம் நன்கு ஆராய்ந்து வாங்கினால், வாழ்நாள் முழுவதும் நம் தோல் பாதுகாக்கப் படும்!

Doodle Soap, தூய்மையான இயற்கை சோப் ஆகும். எங்கள் , கையால் செய்யப் பட்ட இயற்கைக் குளியல் சோப்புக்களை (Natural Handmade Soaps ) வாங்கிப் பயனடையவும். - 100g சோப் Rs 95 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். 100g for Rs 95/- only!


Doodle Information Portal

We publish unbiased information on handmade soap, its benefits, disadvantages, how to choose your soap, various flavours of soap, their benefits and other useful information on handmade natural soaps.

We also publish well-researched informational articles on skin-care in general.


Also Read...