Natural Handmade Soap Doodle Information Portal

Castile Soap in Tamil

Castile Soap in Tamil

Author: Balaji Shankar, May 27, 2024

கேஸ்டீல் சோப் என்பது என்ன?

காஸ்டீல் சோப் என்பது, ஐரோப்பாவிலே தேங்காய் எண்ணையைப் பற்றித் தெரியாத 12ம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டீல் என்னும் பகுதியில் தயாரிக்கப் பட்டது. அதனால் கேஸ்டீல் சோப் என்ற பெயர் பெற்றது. இது முதன் முதலில் தூய ஆலிவ் எண்ணையுடன், காஸ்டிக் சோடாவைக் கலந்து செய்யப் பட்டது.

வேறு எவ்வித ரசாயனப் பொருட்களோ, மிருகக் கொழுப்புக்களோ, செயற்கை இடுபொருட்களோ இன்றித் தயாரிக்கப் படுவதால் கேஸ்டீல் சோப் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது.

த‌ற்போது கேஸ்டீல் சோப் ஆலிவ் எண்ணையுடன் (அல்லது பதிலாக) வேறு நன்மை பயக்கும் தாவர எண்ணைகளைக் கொண்டும் செய்யப் படுகிறது. உதாரணமாக தேங்காய் எண்ணை, பாதாம் எண்ணை, இந்தோனேசியப் பனை எண்ணை போன்றவை கொண்டும் தயாரிக்கப் படுகின்றன.

காஸ்டீல் சோப்பைப் பற்றி அறிவதற்கு முன் நாம் கையால் செய்த சோப் என்றால் என்ன, இயற்கை சோப்பிற்கும், செயற்கை சோப்பிற்கும் என்ன வேறுபாடு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

கையால் செய்த இயற்கைக் குளியல் சோப்

சோப்பு என்பது அதிக காரத்தன்மை (alkaline) கொண்ட கரைசலில், அமில‌த் தன்மை (acid) கொண்ட கொழுப்புக்களைக் (திரவங்களைக்) கலந்து, விடாமல் வெகுநேரம் இளக்கினால் உருவாகும் ஒரு கட்டி. இந்தக் கட்டியானது ஓரளவாவது காரத்தன்மையுடன் இருந்தால்தான் சுத்தம் செய்யும். ஏனெனில், நம் தோலில் சீபம் (sebum) எனப்படும் ஒரு அமிலத்தன்மை கொண்ட எண்ணெய் இயல்பாகவே சுரக்கிறது. இது நம் தோலைப் பாதுகாக்க இயற்கையாய் உள்ள ஒரு விஷயம்.

அழுக்கும், தூசியும், பாக்டீரியாக்களும் இந்த சீபம் என்னும் அமிலத்தில் ஒட்டிக்கொண்டு, வியர்வையோடு ஒரு பிசுபிசுப்பை ஏற்படுத்தி விடுவதால் நாம் குளிக்கும் போது சோப்பு தேவையாகிறது. இயற்கை உணவை உண்டு, சூழல் மாசில்லாத இடங்களில் வாழ்பவர்களுக்கு சோப்பு என்பது தேவையே இல்லை.

சுமார் 4800 வருடங்களுக்கு முன், முதன்முதலில் சோப்பைக் கண்டு பிடித்தவர்கள் பாபிலோனியர்கள் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் மரச்சாம்பலையும் (காரத்தன்மை), மிருகக் கொழுப்புக்களையும் (அமிலத் தன்மை) நீருடன் கரைத்துக் கொதிக்க விட்டு சோப்புக் கட்டிகளைச் செய்தனர்.[1]

கையால் செய்த சோப் என்றால், கொழுப்பையும், காஸ்டிக் சோடாவையும் கலக்க எந்த வித இயந்திரங்களையும் பய‌ன்படுத்தாமல் பாத்திரத்தில் இரண்டையும் கையால் கரண்டி கொண்டு இளக்கி சோப்பு தயாரிப்பதே. (பெரும்பாலான கைசோப்புக்கள் stick-blender எனப்படும் ஒரு மின்-மத்தைக் கொண்டு செய்யப்படுகின்றன. எனினும் அவை யாவும் கையால் செய்யும் சோப்புக்கள் என்றே கருதப்படுகின்றன).

இயற்கைக் குளியல் சோப்

இயற்கைக் குளியல் சோப் என்றால் காஸ்டிக் சோடாவைத் தவிர மற்ற இடுபொருட்கள் யாவும் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டால், அச்சோப்பு இயற்கைக் குளியல் சோப் என்று கருதப்படுகிறது. செயற்கை சோப்பு என்பது ஸ்டீரிக் அமிலம், சல்ஃபேட் போன்ற‌ ரசாயனப் பொருட்களைக் கொண்டு செய்யும் சோப்பு ஆகும்.

கேஸ்டீல் சோப்பின் நன்மைகள்

1. எந்த ரசாயனப் பொருளும் இல்லாததால் கேஸ்டீல் சோப் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது.
2. தூய்மையான காஸ்டீல் சோப் என்பது இயற்கையானது, நச்சுக்கள் அற்றது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது, எளிதில் கரையக் கூடியது, அழுக்கை நன்றாக நீக்குவது, செயற்கைப் பொருட்கள் எதுவும் கலக்காதது (காஸ்டிக் சோடாவைத் தவிர!)
3. நல்ல கேஸ்டீல் சோப்பை குழந்தைகளுக்குக் கூட பயன்படுத்தலாம் (எனினும் லேசாகத் தடவிப் பரிசோதனை செய்த பின்னர் பயன்படுத்தவும்)
4. கேஸ்டீல் சோப் நீரில் நன்கு கரையக் கூடியது. அதை தலைக்குக் குளிக்க ஷாம்பூவிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
5. சருமத்தில் ஏற்படும் காயங்களுக்கு கேஸ்டீல் சோப் ஒரு நல்ல கிருமி நாசினியாகப் பயன்படும் [2]
6. சமையலறை மேடை,காஸ் அடுப்பு, கண்ணாடி போன்ற வழவழப்பான மேற்பரப்புக்கள், டாய்லட், வாஷ் பேசின் போன்றவறை திரவ கேஸ்டீல் சோப் கொண்டு சுத்தம் செய்யலாம்.
7. பாத்திரம் தேய்ப்பதற்கு கேஸ்டீல் சோப் திரவத்தைப் பயன்படுத்தலாம். ( தேங்காய் எண்ணையை அடிப்படையாகக் கொண்ட டூடில் சோப் போன்றவற்றால் பாத்திரம் தேய்த்தால் மிகவும் சுத்தமாகும். எனினும் நன்கு நீரில் கழுவ வேண்டும்; இல்லையெனில் உப்பு போன்ற லேசான வெள்ளை புள்ளிகள் பாத்திரத்தில் தென்படலாம் - இது பெரும்பாலும் உங்கள் நீரின் தன்மையைப் பொறுத்தே ஏற்படும்)

Doodle Soap, தூய்மையான கேஸ்டீல் சோப் ஆகும். எங்கள் , கையால் செய்யப் பட்ட இயற்கைக் குளியல் சோப்புக்களை (Natural Handmade Soaps ) வாங்கிப் பயனடையவும் - 100g சோப் Rs 95 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

[1] https://en.wikipedia.org/wiki/Soap
[2] https://pubmed.ncbi.nlm.nih.gov/10406699/

Doodle Information Portal

We publish unbiased information on handmade soap, its benefits, disadvantages, how to choose your soap, various flavours of soap, their benefits and other useful information on handmade natural soaps.

We also publish well-researched informational articles on skin-care in general.


Also Read...