Natural Handmade Soap Doodle Information Portal

Pungam Oil Soap Benefits in Tamil

Pungam Oil Soap Benefits
Author: Balaji Shankar, Jun 5, 2024

Informational article on the benefits of Pungam Oil Soap in Tamil

புங்கம் எண்ணை சோப்பின் நற்பயன்கள்

புங்கம் எண்ணை என்பது என்ன?

Pongamia ponnata என்ற அறிவியற் பெயர் கொண்ட புங்க மரம், தென்னிந்தியாவின் ஒரு மிகச் சிறந்த மூலிகை மரமாகும். வருடம் ஒருமுறை வசந்த காலத்தில் பூக்கும் இம்மரத்தின் கொட்டைகளில் இருந்து பிழியப்படும் எண்ணை புங்க எண்ணை அல்லது புங்கம் எண்ணை என்று அழைக்கப் படுகிறது. இதை கரஞ்சா எண்ணை (karanja oil) என்று வடமாநிலங்களில் அழைக்கின்றனர்.

புங்க மரம்

ஒரு மர‌த்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு ஒன்று முதல் பத்து கிலோ வரை எண்ணை பெறலாம். இது தானாகவே சாலையோரங்களிலும், எல்லா மண்வகைகளிலும் வளர்வதால் இதைத் தனியாகப் பணப்பயிராக யாரும் விளைப்பது இல்லை. எனினும் ஒரு மரத்தில் 5 கிலோ எண்ணையும், ஒரு ஏக்கருக்கு 100 மரமும் விளைக்க இயலும் என்பதால் இது வறண்ட பூமியிலும் கூட ஒரு வருடத்திற்கு ஏக்கருக்கு ரூ. 50,000 வருமானம் ஈட்டக் கூடியது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

புங்க மரத்தின் பயன்கள்

இது காற்றில் உள்ள கரியமில வாயுவைத் தன் வேர்முடிச்சுக்களில் சேர்த்து மண்ணை வளமாக்கும் ஒரு அபூர்வ மரமாகும்.

[ கீழ்க்கண்ட புங்க மரத்தின் மருத்துவப் பலன்கள் யாவும் அமெரிக்காவில் உள்ள பர்ட்யூ பல்கலைக் கழகத்தால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. https://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Pongamia_pinnata.html ]

புங்க எண்ணை மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணி.

இம்மரத்தின் இலைகள் காது, மூக்கு, தொண்டை நோய்களைத் தவிர்க்க வல்லது. புங்க இலைச் சாறானது, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வயிற்று உப்புசம், குஷ்ட ரோகம் போன்ற சரும நோய்கள் இவற்றுக்கெல்லாம் மருந்தாகப் பயன்படும்.

மரப்பட்டைகளைப் பொடித்துத் தேநீர் போல் நீரில் தயாரித்து உட்கொண்டால் மூலத்தால் ஏற்படும் ரத்தப் போக்கு கட்டுப்படும்.

புங்க மரத்தின் இலைச் சாறும், புங்க எண்ணையும் இரண்டும் சீழ் எதிரிகள் (anti septic) ஆகும்.

புங்க இலைச்சாறு சொறி, சிரங்கு, அக்கி போன்ற பலவித சரும வியாதிகளுக்கும் நிவாரணமும் தீர்வும் அளிக்கின்றது. விதைகளைப் பொடி செய்து டானிக் செய்து உட்கொண்டால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கக்குவான் இருமல் போன்ற நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சோப்பு தயாரிப்பில் புங்கம் எண்ணை எவ்வாறு பயன்படுகிறது?

கைவினைச் சோப்பு (handmade soap) என்பது எனப்படும் காஸ்டிக் சோடா நீர்க்கரைசலில், தாவர எண்ணைகளை நுணுக்கமாகக் கலந்து செய்யப்படும் ஒரு கட்டி. நாம் விருப்பம் போல எந்த எண்ணையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அவ்வவ்வெண்ணைக்கு ஏற்ப அச்சோப்பின் தரமும் தன்மையும் அமையும்.

புங்கம் எண்ணையில் ஓலியிக் (oleic) மற்றும் லினோலியிக்(linoleic) கொழுப்பு அமிலங்கள்(fatty acids) அதிகமாக இருப்பதாலும், இதன் மிக அருமையான அயோடின் குறியீட்டாலும் (86) இது சோப்பு தயாரிக்க மிக ஏதுவானது.

புங்கம் எண்ணை கசப்பான வாடையும், நல்ல கெட்டித்தன்மையும், சருமத்தில் பட்டால் (சிலருக்கு) அரிக்கக் கூடிய தன்மையும் கொண்டது. எனவே இதை தேங்காய் எண்ணை, ஆலிவ் எண்ணை போன்ற பிற எண்ணைகளுடன் கலந்தே சோப்பில் பயன்படுத்த வேண்டும்.

புங்கம் எண்ணையைச் சேர்ப்பதால் சோப்பில் என்ன நன்மைகள் ஏற்படும்?

புங்க எண்ணை ஃப்ளேவனாய்டுகள் (flavanoids) எனப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் (anti-oxidants) அதிகம் கொண்டது. பாக்டீரியா மற்றும் காளான் (fungus) தாக்குதலை எதிர்க்கக் கூடியது. எனவே இது கீழ்க்கண்ட பணிகளை நம் சருமத்தில் சிறப்பாகச் செய்கின்றது.

  • சருமத்தை மீட்டுருவாக்குதல்
  • சருமத்தை UV கதிர்களிடமிருந்து பாதுகாத்தல்
  • சருமம் வெய்யிலால் கருப்படையாமல் பாதுகாத்தல்
  • தோலில் ஈரப்பதம் காத்தல்
  • தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தாமதப்படுத்துதல்
  • சருமத்தை மிருதுவாக்குதல்
  • கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்குதல் (தோலில் சுருக்கம் விழுவதற்குக் கொலாஜன் குறைவே காரணம்)
  • தோல் அரிப்பு, சோரியாஸிஸ் போன்றவற்றை எதிர்த்தல்
  • தோலில் ஏற்பட்ட புண்களைச் சரி செய்தல்
  • பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகளைக் குறைத்தல்/களைதல்

நிறைவாக ...

இவ்வளவு நன்மைகளை அளிக்கும் புங்க எண்ணை சோப்பை நாங்கள் Doodle Soap Works நிறுவனத்தில் இயற்கை எண்ணைகளைக் கொண்டு கைவினையாய்த் தயாரித்து (natural handmade soaps) 100 கிராம் ரூ 95 மட்டுமே என்ற குறைந்த விலையிலே உங்களுக்கு அளிக்கிறோம். விரும்புவோர் வாங்கிப் பயனுறவும்! Whatsapp : 90256 97739

References

[1] https://en.wikipedia.org/wiki/Pongamia_oil
[2] https://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Pongamia_pinnata.html#Chemistry

Doodle Information Portal

We publish unbiased information on handmade soap, its benefits, disadvantages, how to choose your soap, various flavours of soap, their benefits and other useful information on handmade natural soaps.

We also publish well-researched informational articles on skin-care in general.


Also Read...